Well Water Fire | தீப்பற்றி எரியும் கிணற்று நீர்.. பீதியில் மக்கள்.. வெளியான திக் திக் காட்சி

Update: 2025-08-07 03:14 GMT

Well Water Fire | தீப்பற்றி எரியும் கிணற்று நீர்.. பீதியில் மக்கள்.. வெளியான திக் திக் காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கீழ்பம்மம் பகுதியில் கிணற்று தண்ணீர் தீப்பற்றி எரியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன் என்பவரது வீட்டுக் கிணற்றில் எடுத்த தண்ணீர் எளிதில் தீப்பற்றி எரிந்தது. இதேபோல் அருகிலுள்ள வீடுகளிலும் கிணற்றுத் தண்ணீரில் தீப்பற்றியதால், மக்கள் அதனை குடிக்கவோ பயன்படுத்தவோ முடியாமல் தவிக்கின்றனர். கிணற்று நீரானது, பெட்ரோல் மற்றும் டீசல் கலந்த கலவையாக மாறியதாக கூறப்படுகிறது. அருகிலுள்ள அரசு போக்குவரத்து பணிமனை மற்றும் பல பெட்ரோல் பங்குகளில் இருந்து எரிபொருள் கசியும் வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது. இது தொடர்பாக நகராட்சி மற்றும் பெட்ரோலிய துறையினர் விரைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்