``ஒத்த ரூபா கூட தர முடியாது.. நாங்க நினைச்சா பல கோடி லாஸ் ஆகும்’’ - எச்சரிக்கை

Update: 2025-05-21 02:31 GMT

பார்க்கிங் கட்டணத்திற்கு எதிர்ப்பு - சென்னையில் 4,500 கண்டெய்னர்கள் இயங்காது என அறிவிப்பு

சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர்களுக்கு 100 ரூபாய் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் புதிய அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மூன்று நாட்களுக்கு 4500 கண்டெய்னர்களை இயங்கப்போவதில்லை என 12 லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்கங்கள் அறிவித்துள்ளன. மூன்று நாட்களுக்குள்‌ பார்க்கிங் கட்டணத்தை வாபஸ் பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஒரு ருபாய் கூட பார்க்கிங் கட்டணம் தர முடியாது என்றும், தங்களின் வேலை நிறுத்தத்தால் பலகோடி ருபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்