``தூக்கு தண்டனையை தடுக்க எங்களால் முடியாது.. ஒரே வழி தான்'' - இந்திய அரசு ஷாக் பதில்
கேரள நர்ஸ் நிமிஷா வழக்கு - மத்திய அரசை அணுக கூறும் உச்ச நீதிமன்றம்
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு நிலையில், நிமிஷாவின் குடும்பத்தினரை தவிர பிறர் மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளிக்காது என்று மத்திய அரசு இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கைக் குழு' என்கிற அமைப்பு ஏமன் செல்ல அனுமதி வேண்டி தொடர்ந்திருந்த வழக்கில் மத்திய அரசை அணுகும் மாறு கூறி உச்ச நீதிமன்றம், வழக்கை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தது.