"தர்பூசணிக்கு ஊசி போடுறோமா" கொடியிலேயே `நிறம் மாறும்' பழம்.. கண்ணீரில் விவசாயிகள்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சக்திவிளாகம் கிராமத்தில் தர்பூசணி பழங்களில் ஊசி செலுத்தப்படுவதாகக் கூறி வியாபாரிகள் வாங்க மறுப்பதால், தர்பூசணி பழங்கள் அழுகி வீணாகும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து இருப்பதாக கவலை தெரிவிக்கும் விவசாயிகள், அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.