Ariyalur தமிழகத்தையே உலுக்கிய விபத்துக்கு காரணம் ஒரு நாயா? - வெடித்து பறந்த சிலிண்டர் - ஷாக் வீடியோ
திருச்சியில் இருந்து அரியலூருக்கு லாரி மூலம் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர்கள் ஏற்றிச் செல்லப்பட்டது. வாரணவாசி பகுதியில் திடீரென நாய் குறுக்கே வந்ததால் ஓட்டுநர், சட்டென லாரி பிரேக்கை அழுத்தியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சாலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் சிதறின. நான்கு கிலோமீட்டர் சுற்றளவுக்கு பயங்கர சப்தம் கேட்டதால் கிராமமக்கள் பீதி அடைந்தனர்.