காத்திருந்த அஜிதா ஆக்னல்... "வரவேற்க மறுத்த N.ஆனந்த்..?"தவெகவில் சலசலப்பு

Update: 2025-06-15 15:55 GMT

தமிழக வெற்றிக்கழக கல்வி விருது விழாவுக்கு வருகை தந்த தூத்துக்குடி பெண் மாவட்ட பொறுப்பாளருக்கு உரிய வரவேற்பு அளிக்கப்படாததால் சலசலப்பு ஏற்பட்டது.

மாமல்லபுரத்தில் நடந்த த.வெ.க இறுதிக்கட்ட கல்வி விருது விழாவுக்கு, தூத்துக்குடி மாவட்ட தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், அம்மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் அனுமதி சீட்டுகள் இன்றி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மாணவர்களுடன் காத்திருந்த அஜிதா, பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, விழாவில் கலந்துகொள்ள வந்த மாணவர்கள், பெற்றோர்களை அரங்க வாயிலில் நின்று வரவேற்று சிறு தீனி தொகுப்பை வழங்கிய த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், அஜிதா வருகையின்போது வரவேற்க மறுத்ததாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் மாவட்ட செயலாளர் பிரச்சனையில், போட்டியாளர்களில் ஒருவராக கருதப்படும் அஜிதாவுக்கு, விழாவில் வரவேற்பு அளிக்கப்படாதது, அம்மாவட்ட நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்