Voter List | ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் - தமிழக வோட்டர் லிஸ்ட்டில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

Update: 2025-09-12 05:47 GMT

ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள்...குன்னூரில் அதிர்ச்சி

குன்னூர் சட்டமன்ற தொகுதியில், வாக்காளர் பட்டியலில் ஒரே வீட்டில் 79 பேர் இடம்பெற்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடேரி கிராமம், வாக்குச்சாவடி எண் 210-க்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் குளறுபடிகள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. 11,12 மற்றும்17 ஆகிய வார்டுகள், இந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட நிலையில், 9 மற்றும் 10வது வார்டுகளின் வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இதேபோல் வீட்டு எண் 11-ல் 79 பேரும், வீட்டு எண் 12-ல் 33 பேரும் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் பதிவாகி உள்ளது. மேலும், இப்பகுதியிலருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிய பலரது பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து

குன்னூர் சார் ஆட்சியர் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு அப்பகுதி மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்