Vishal Speech | ``குப்பை தொட்டியில வீசிட்டு போய்ட்டே இருப்பேன்’’ - தெறிக்கவிட்ட விஷால்
எனக்கு விருது தந்தால் அது குப்பைத் தொட்டிக்கு போகும் என நடிகர் விஷால் பேச்சு தனக்கு விருதுகள் கொடுத்தால் அதை குப்பைத் தொட்டியில் வீசிவிடுவேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் விஷால், எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை என்றும், நான்கு பேர் அமர்ந்து கொண்டு 7 கோடி பேருக்கு பிடித்த படம், பிடித்த நடிகர், பிடித்த துணை நடிகர் என எப்படி தீர்மானிக்க முடியும்? என கேள்வி எழுப்பி உள்ளார்.தனக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்பதால், தான் இதை சொல்லவில்லை என்றும், அப்படி கொடுத்தால் போகிற வழியில் குப்பைத் தொட்டியில் வீசி விடுவேன் எனவும், அந்த விருதில் தங்கம் இருந்தால் அதை அடகு வைத்து அன்னதானம் செய்வேன் என்றும் தெரிவித்தார்.