விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பயங்கரம்- ஓடிவந்து இளைஞரை கத்தியால் குத்திய நபர்

Update: 2025-08-29 08:08 GMT

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மோதல்-இளைஞருக்கு கத்திக்குத்து

தேனி மாவட்டம் கம்பத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் ரித்திக் ரோஷன். இவர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட நிலையில் மணி கட்டி ஆலமரம் தெருவைச் சேர்ந்த புவின் தரப்பினருக்கும், ரித்திக் ரோஷன் தரப்பினருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சிலைகளை கரைத்து விட்டு ரித்திக் ரோஷன் மீண்டும் வந்துகொண்டிருந்த போது புவின் தரப்பினரை பார்த்து ஏன் என்னிடம் தகராறில் ஈடுபட்டீர்கள் என கேட்டுள்ளார். அப்போது இருட்டில் கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் ரித்திக் ரோஷனை முதுகுப் பகுதியில் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். படுகாயம் அடைந்த ரித்திக்கை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்