Viluppuram | நிலத்தகராறு - இருதரப்பினர் மோதிக்கொள்ளும் அதிர்ச்சி காட்சி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நிலத் தகராறில் இருதரப்பினர் மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிராபுலியூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது நிலத்தை 25 ஆயிரம் ரூபாய்க்கு குத்தகைக்கு பெற்ற ஜெயமூர்த்தி, அதற்கான காலம் முடிந்தும் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக நடந்த பேச்சு வார்தையின் போது மூர்த்தி மற்றும் ஜெயமூர்த்திக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.