Vijay | TVK | வீட்டில் பதுங்கிய நபர்... தானே பிடித்த விஜய்? பாதுகாப்பை மீறி சென்றது எப்படி..?

Update: 2025-09-19 11:10 GMT

நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த மதுராந்தகத்தை சேர்ந்த அருண் என்பவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விஜய் வீட்டின் பின் பக்கம் உள்ள சிறிய கேட் வழியாக பாதுகாவலர்கள் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினமே அந்த இளைஞர் உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது. விஜயை பார்க்க இரவு முழுவதும் மாடியின் மீது உணவின்றி பதுங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. விஜய் நேற்று மாலை வாக்கிங் சென்றபோது இதை கவனித்த நிலையில், விஜய்யை பார்த்ததும், அந்த இளைஞர் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டதும், அவரை தரைத்தளத்திற்கு அழைத்து வந்து பாதுகாவலர்களிடம் விஜய் ஒப்படைத்ததும் தெரியவந்துள்ளது. அந்த இளைஞர் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டதால், அவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு விஜய் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, பாதுகாப்பு கருதி த.வெ.க தலைவர் விஜய் இல்லத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர்...

Tags:    

மேலும் செய்திகள்