நீதி கேட்ட விஜய் - ஒரு `தவெக உறுப்பினராக’ அஜித்தின் தம்பி சொன்ன வார்த்தை
விஜய் குறித்து திருப்புவனம் அஜித்தின் தம்பி சொன்ன வார்த்தை
அஜித்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக ஏழரை லட்ச ரூபாய் நிவாரணம் தொகையை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கியுள்ளார். காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு திருப்புவனம் மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வலுத்து வந்தது. இந்நிலையில், திமுக கட்சி சார்பாக 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அஜித்குமார் குடும்பத்திற்கு ஏழரை லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.