Vetrimaaran | Doctorate Degree | வேல்ஸ் பல்கலை.யில் வெற்றிமாறன், அஸ்வினுக்கு கௌரவ டாக்டர் பட்டம்
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியில் வேல்ஸ் பல்கலைகழகம் செயல்படுகிறது. இங்கு 16 வது பட்டமளிப்பு விழா நடைபெற்ற நிலையில், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் கிரிக்கெட் வீரர் அஸ்வின், சினிமா தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் ஆகியோருக்கு கௌரவர் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.