தாசில்தார் அலுவலகத்தில் குடியேறி மக்கள் போராட்டம் - அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டதால் அதிர்ச்சி
செதுக்கரை பகுதியில் கடந்த 2000 ஆம் ஆண்டு 32 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. வீடுகட்டி குடியேறியும் பட்டா ஆன்-லைனில் பதிவு செய்யப்படவில்லை. பட்டாவை ஆன்லைனில் பதிவு செய்யுமாறு வட்டாட்சியர், கோட்டாச்சியரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லாத வேளையில், குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர். வட்டாட்சியர் அலுவலகத்திலேயே சமைத்தவர்கள், அங்கேயே பீடி சுற்றி தங்கள் பணிகளையும் செய்ய தொடங்கினர். உடனடியாக அவர்களிடம் போலீசார், குடியாத்தம் கோட்டாசியர் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பட்டாவை ஆன்-லைனில் பதிவு செய்யப்படும் என அவர்கள் உறுதியளித்ததும் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.