Vellore | Crime | நண்பனை கொன்று பைக்கில் சடலமாக ஏற்றிய நண்பர்கள்... வேலூரில் பேரதிர்ச்சி
வேலூரில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டு, இருசக்கர வாகனத்தில் வைத்து ஆந்திர எல்லையோரம் உடல் வீசப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆரணி பத்தியாவரத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகன் டேனி வளனரசு, வேலூர் சாய்நாதபுரத்தில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி, அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். புத்தாண்டு நள்ளிரவில் நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில், டேனி வளனரசு அடித்துக் கொல்லப்பட்டதாக தெரிகிறது. அவருடைய உடலை, இரண்டு பேர், இருசக்கர வாகனத்தில் அமர வைத்து, ஆந்திர எல்லையோரம் உள்ள மலை அடிவாரத்தில் வீசி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, டேனி வளனரசுவை அவருடைய பெற்றோர் செல்போனில் தொடர்பு கொள்ள முடியாததால் நேரில் வந்து பார்த்தபோது, அவர் கொல்லப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் பிடித்து விசாரித்து, டேனி வளனரசுவின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவ கல்ல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.