Vellore Court | தமிழகத்தையே நடுங்கவிட்ட கொடூரனுக்கு அடுத்த பேரிடியை இறக்கிய கோர்ட்
வேலூர் அருகே, ஓடும் ரயிலில் கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கீழே தள்ளிவிட்ட வழக்கில் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவித்து வரும் நபருக்கு மற்றொரு வழக்கில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்வரி மாதம், ரயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்ட வழக்கில் கைதான ஹேம்ராஜ் என்பவர், வேலூர் மத்திய சிறையில் வாழ்நாள் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு காட்பாடி அருகே ஓடும் ரயிலில் வேறொரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று, அவருடைய கைப்பேசியை பறித்த வழக்கில், ஹேம்ராஜுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.