Vellore Bomb | வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் - ஸ்பாட்டுக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள்

Update: 2025-10-17 03:00 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வன விலங்குகளை வேட்டையாட தயார் செய்து வைத்திருந்த 15 நாட்டு வெடிகுண்டுகள், செயலிழக்கச் செய்யப்பட்டன. செங்குன்றம் வனப்பகுதியில், கடந்த 30ம் தேதி அன்று சந்தோஷ் என்பவரிடம் இருந்து இந்த நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில், இதனை செயலிழக்கச் செய்ய சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இதனைத் தொடரந்து வனப்பகுதியில் பத்தடி ஆழம் தோண்டப்பட்டு, மின்வேலி தயார் செய்யப்பட்டு, பாதுகாப்பான முறையில் நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்