வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஊர்க்காவல் படை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணி முடித்து ஊர்க்காவல் படை காவலர் ராஜேஷ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மசிகம் அருகே எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதியதில் படுகாயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு வாகனத்தில் வந்த ஏஜாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.