தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவான 47.5அடியில், 45.3அடி வரை தற்போது நிரம்பியுள்ளது.
இந்நிலையில் ஏரியின் பாதுகாப்பு கருதி சென்னை குடிநீர் தேவைக்கு 73 கன அடி தண்ணீரும், சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 700 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.