Vedharanyam | Tvk | நள்ளிரவில் குடும்பத்துடன் அலறி அடித்து ஓடிய தவெக நிர்வாகி
வேதாரண்யம் அருகே தவெக நிர்வாகி வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் இருசக்கர வாகனம் சேதமடைந்துள்ளது.நாகப்படினம் மாவட்டம் தவெக வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய பொருளாளராக இருப்பவர் சக்திவேல். கரியாப்பட்டினத்தில் உள்ள இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள், சக்திவேலின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தியதுடன், அவரது வீட்டின் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். வீட்டின் பின்பக்கமாக குடும்பத்தினர் அனைவரும் தப்பிய நிலையில், பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.