வசந்த் அண்ட் கோ வின் 133 -வது கிளையாக திண்டுக்கல்லில் 2 - வது கிளையை அந்நிறுவனத்தின் பங்குதாரர் V.வினோத் வசந்த் திறந்து வைத்தார்.. திண்டுக்கல்லில் உள்ள பழனி சாலை அய்யன்குளம் அருகே அமைந்துள்ள இந்த கடையை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார். அதன்படி தங்கள் நிறுவனத்திற்கு வந்து பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் 5 கார்கள், இருசக்கர வாகனங்கள், பெண்களுக்கு ஸ்கூட்டி மற்றும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்...