``என்னது நான் செத்துட்டேனா?’’ - பதறிய பெண்.. சிக்கிய VAO

Update: 2025-03-15 03:06 GMT

கும்மிடிப்பூண்டி அருகே உயிருடன் உள்ள பெண்ணுக்கு இறப்பு சான்றிதழ் அளித்த வி.ஏ.ஒ உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் இறந்து விட்டதாக கூறி அவரது மகன் விக்னேஷ் இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து ஆத்துப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ராஜா என்பவர் விசாரணை நடத்தாமலே சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தாசில்தார் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், காவல்துறையினர் விக்னேஷ், வி.ஏ.ஒ.ராஜா மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்