30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பக்தர்கள் சென்ற வேன்- 10 பேர் துடிதுடித்து பலி

Update: 2025-08-12 09:31 GMT

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற வேன், 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். புனே அருகில் உள்ள பபல்வாடி கிராமத்தை சேர்ந்த 40 பேர், வேனில் மகாதேவ் குண்டேஷ்வர் கோயிலுக்குச் சென்றனர். மலைப்பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தபோது, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள வெவ்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்