"என்.டி.ஏ கூட்டணிக்கு வந்தால் வைகோ மீண்டும் எம்.பி ஆகலாம்"
தங்களுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வந்தால் மீண்டும் மாநிலங்களவைக்கு வர முடியும் என்று மத்திய இணையமைச்சரும், இந்திய குடியரசு கட்சியின் மாநிலங்களை உறுப்பினருமான ராம்தாஸ் அதவாலே அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைவதால், அவர்களுக்கு மாநிலங்களவையில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், பேசிய ராமதாஸ் அதவாலே, ஓய்வுபெறப் போகும் 6 பேரில் ஒருவர் மீண்டும் அவைக்கு வரப்போவதாக தெரிவித்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு தாம் விடை கொடுக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், தங்களுடன் வைகோ வந்தால் மீண்டும் மாநிலங்களவைக்கு வர முடியும் என்றும் தெரிவித்தார்.