பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. கடந்த 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்பட்டது. மதுரை ரயில் நிலைய 4வது நடைமேடையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் முன்பாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கேக் வெட்டி கொண்டாடினர்.
ரயில்வே ஊழியர்களை பாராட்டி நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன