Vaigai Dam || விடிய விடிய பெய்த கனமழை ஆர்ப்பரிக்கும் வெள்ளம் நிரம்பும் வைகை அணை
வைகை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால், அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியை எட்டியுள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.