திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோவிலில், வைகாசி மாத கோடை உற்சவம் விமரிசையாக தொடங்கியுள்ளது. வெளிகோடை உற்சவத்தின் தொடக்க நாளில், தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, நாலுகால் மண்டபத்தில் மல்லிகைப்பூக்கள் மற்றும் வாசனை திரவியங்களுடன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.