யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில், முதல்நிலை தேர்வு முடிந்ததும் விடைக் குறிப்புகள் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
(card-1)யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
(card-2)இந்த வழக்கில், முதல்நிலை தேர்வு முடிந்ததும் விடைக் குறிப்புகள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா தெரிவித்திருந்தார்.
(card-3)அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த யுபிஎஸ்சி, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.