தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி (B.Sc) மற்றும் பிஓடி (BOT), பிபிடி (BPT), இளங்கலை மருந்தியல் (Bachelor of Pharmacy), பார்ம் டி (Pharm.D) , டிப்ளமோ நர்சிங் (பெண்கள்) ஆகிய மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூலை 7 ஆம் தேதி வரை இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.