University Issue | இறந்த ஊழியர்கள் பெயரில் ட்ரான்ஸ்பர்..? அண்ணாமலை பல்கலை.,ல் பரபரப்பு

Update: 2025-10-16 10:34 GMT

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே இறந்த 2 பேரின் பெயரில் பணியிட மாற்ற ஆணை விடுவிக்கப்பட்டது ஊழியர்கள் மத்தியில் பேசுபொருளானது. நிதி நெருக்கடி காரணமாக இந்தப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு கடந்த 2013-ஆம் ஆண்டு பொறுப்பில் எடுத்தது. அதன்பின்னர், பல்கலைக்கழக ஊழியர்கள் அரசின் பல்வேறு துறைகளுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில், ஏற்கனவே இறந்துபோன தியாகராஜன் மற்றும் அருள்முருகன் ஆகியோரது பெயரில், பணியிட மாற்ற ஆணையை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டது பேசுபொருளானது. இதற்கு விளக்கம் அளித்த பல்கலைக்கழக நிர்வாகம், அரசிடம் பெயர் பட்டியலை அளித்த பின்னர்தான் அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்