வந்த செய்திகளை பார்த்து மனம் பொறுக்க முடியாமல் ரிதன்யா வீட்டிற்கே சென்ற தலைவர்
ரிதன்யா குடும்பத்திற்கு தேசிய ஹஜ் கமிட்டி துணை தலைவர் நேரில் ஆறுதல்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் குடும்பத்தாருக்கு தேசிய ஹஜ் கமிட்டி துணை தலைவர் மூனாவரி பேகம் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பிறகு செய்தியார்களிடம் பேசிய அவர் ,
ரிதன்யாவின் தற்கொலை பற்றிய செய்திகளை பார்த்து மனம் பொறுக்க முடியாமல் குடும்பத்தினரை பார்த்து நேரில் ஆறுதல் கூறுவதற்காக
வந்ததாகவும், ரிதன்யாவின் தற்கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்