Ulundurpettai Crime News | பெற்ற தாயை கழுத்தை நெறித்து கொ*ற 14 வயது மகன்.. வெளியான பகீர் காரணம்
உளுந்தூர்பேட்டை அருகே அடிக்கடி திட்டியதால் மகனே அம்மாவை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிழக்கு குப்பம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குணசேகரன்-மகேஸ்வரி தம்பதி, இவர்களுக்கு17வயதில் மகளும் 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் மகேஸ்வரி புல் அறுக்க சென்ற போது மர்மான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து குணசேகரன் அளித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது 14 வயது மகன் கொலை செய்ததை கண்டுபிடித்தனர். குறிப்பாக அம்மா தன்னை அடிக்கடி திட்டியதால் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக சிறுவன் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து சிறுவனை கைது செய்தனர்.