Ulundurpet Attack | TN Police | ஊராட்சிமன்ற துணை தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
உளுந்தூர்பேட்டை அருகே ஊராட்சி மன்ற துணை தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவரான டேவிட் என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மரிய ஆனந்த் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டேவிட், தனது நண்பர்களுடன் வீட்டு வாசல் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு 10க்கும் மேற்பட்டோருடன் வந்த மரிய ஆனந்த் தீடீரென பெட்ரோல் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 8 பேரை கைது செய்து, மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.