திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, ஆனை மலை புலிகள் காப்பகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியரை காட்டுயானை ஒன்று ஆக்ரோஷமாக துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை மூணாறு சாலையில் ரோந்து பணிகாக நாகராஜ் என்ற வன ஊழியர் சென்ற போது, அந்த பகுதிக்கு வந்த காட்டுயானை திடீரென அவரை துரத்த ஆரம்பித்தது. மரண பயத்தை காட்டிட்டான் பரமா என சுப்பிரமணியபுரம் பட காட்சி போல உயிரை கையில் பிடித்து கொண்டு வன ஊழியர் ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.