தமிழ்நாட்டில் உதயம் காட்டன் நிறுவனத்தின் முதல் ஷோரூம் திறப்பு
வேலூரில் உதயம் காட்டன் நிறுவனத்தின் முதல் ஷோருமை விஐடி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.வி செல்வம் திறந்து வைத்தார்.. தோட்டப்பாளையம் பகுதியில், ஆண்கள் வேட்டி சட்டைக்களுக்கு பிரபல பிராண்டான உதயம் காட்டனின் முதல் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.இதில் மருத்துவர் விஜய கோவிந்தராஜன் கலந்துக்கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்த நிலையில், வேலூர் டிஆர்எம் குழுமத்தைச் சேர்ந்த பழனி முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.திறப்பு விழா நிகழ்ச்சியில் உதயம் நிர்வாக இயக்குனர் பி.ஆர் அருண் ஈஸ்வர் மற்றும் உதயம் நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.