கண்முன்னே அணு அணுவாக பிரிந்த 2 மகன்கள் உயிர் - கையறு நிலையில் கதறிய பெற்றோர்
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே வாணியாறு நீரோடையில் குளித்த 2 சிறுவர்கள், பெற்றோர் கண் முன்னே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கே.புத்தூரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர், வாணியாறு நீரோடையில் துணிகள் துவைக்க சென்றனர். அப்போது, அவர்களது மகன்கள் தீபக் மற்றும் காமேஷ், நீச்சல் பழக தண்ணீரில் இறங்கியபோது, நீரில் மூழ்கினர். பெற்றோர் காப்பாற்ற முயன்றும், சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்புத்துறை உதவியுடன் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.