இரண்டரை மணி நேரம் விசாரணை.. உள்ளே நடந்தது என்ன? - அஜித்தின் தம்பி பரபர பேட்டி
காவல் நிலைய விசாரணையின்போது உயிரிழந்த திருப்புவனம் அஜித் குமாரின் தம்பி நவீன் குமாரிடம் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார். மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி, மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், உயிரிழந்த அஜித் குமாரின் தாயார் தம்பி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணைக்குப் பிறகு பேட்டி அளித்த அஜித் குமாரின் தம்பி நவீன் குமார், நீதிமன்ற விசாரணையில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, மடப்புரம் கோயிலைச் சுற்றி கடை வைத்திருப்பவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.