TVKVijay | SVeShekher | "2026 தேர்தல் - விஜய்க்கு அரசியலை புரியவைக்கும்" நடிகர் எஸ்.வி.சேகர் அட்டாக்
"2026 தேர்தல் - விஜய்க்கு அரசியலை புரியவைக்கும்"
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு போதிய அரசியல் புரிதல் இல்லை என்றும், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல் அவருக்கு புரிதலை ஏற்படுத்தும் என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார். சென்னை மந்தைவெளிப்பாக்கம் 5-ஆவது தெருவுக்கு எஸ்.வி. சேகரின் தந்தை எஸ்.வி. வெங்கடராமன் பெயர் சூட்டப்பட்டது. இதையொட்டி தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது விஜயை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்தார்.