TVK Vijay birthday | Auto drivers | ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்பு, சீருடைகள் வழங்கிய த.வெ.க.வினர்
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி, நெல்லை மேலப்பாளையத்தில் 51 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்பு மற்றும் சீருடைகளை அக்கட்சி நிர்வாகிகள் வழங்கினர். த.வெ.க நெல்லை வடக்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர் முகமது கனி ஏற்பாட்டில், வடக்கு மாவட்ட இணை செயலாளர் மரிய ஜான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் பைசல், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுபர்தனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வடக்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர் முகமது கனி மற்றும் கட்சி நிர்வாகிகள், சீருடை மற்றும் இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்வினை இணை அமைப்பாளர் இன்பண்ட், பொருளாளர் தாரிக் மற்றும் மீனவர் அணி நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.