அஜித்தை போல் கார் ரேஸில் ஈடுபட தயாராகி வருவதாக டிடிஎஃப் வாசன் தகவல்
நடிகரும் ரேஸருமான அஜித்குமாரைப்போல் கார் ரேஸில் ஈடுபட தயாராகி வருவதாக பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் என்ற படத்தில் டிடிஎஃப் வாசன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் (promotion) நிகழ்ச்சி, திருச்செந்தூர் அருகேவுள்ள பேயன்விளையில் நடைபெற்றது. இதில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிடிஎஃப் வாசன், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவதாகவும், நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பேன் என்றும் கூறினார். 2029ம் ஆண்டு தேசிய அளவிலான கார் ரேஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.