ரஷ்யாவின் கம்சட்கா Kamchatka தீபகற்ப பகுதியில், பூமிக்கு அடியில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் எட்டு புள்ளி எட்டாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. பசிபிக் கடலில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் ஹவாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரஷ்யாவின் கம்சட்கா Kamchatka தீபகற்பத்தில் 10 முதல் 13 அடி வரை சுனாமி அலைகள் எழும்பின.
நில நடுக்கத்தின்போது ஒரு வீட்டில் இருந்த நாற்காலி, மேஜை மற்றும் அதன் மீது இருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் குலுங்கின..
கின்டர்கார்டன் kindergarten பகுதியில்
மழலையர் பள்ளி கட்டிடம் ஒன்று சேதமடைந்தது. கட்டிடத்திற்குள் குழந்தைகள் யாரும் இல்லை என்றும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.. இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடைபெற்றன.
கம்சட்கா தீபகற்பத்தில், செவெரோ-குரில்ஸ்க் Severo-Kurilsk நகரில் சுனாமி தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
கம்சட்கா தீபகற்பத்தில் நிலநடுக்கத்தால் மருத்துவமனை கட்டிடத்தில் உபகரணங்கள் குலுங்கிய நிலையில், அதைப்பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.