தமிழகத்தில் கால் வைத்ததும் ஏர்போர்ட்டிலே வைத்து தூக்கிய போலீஸ்

Update: 2025-03-30 03:06 GMT

திருச்சி முசிறியில் மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்‌.

ரியாத்தில் இருந்து இலங்கை வழியாக வந்த விமானத்தில் பயணித்த திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த பாரூக் அலி தாவூத் என்பவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த போது, அவர் மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, பாரூக் அலி தாவூத் கைது செய்யப்பட்டு முசிறிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்