Trichy | NMMK | New Political Party | தமிழகத்தில் உதயமான புதிய கட்சி - அறிமுகமானது ந.ம.மு.க. கொடி
திருச்சியில் உள்ள தனியார் விடுதியில், நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சிக்கொடியை அதன் நிறுவனர் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தேனியில் உள்ள மங்களதேவி கண்ணகி கோயில் புனரமைப்புக்காக டிசம்பரில், நீதி யாத்திரை நடத்த இருப்பதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலில், ஒத்தக் கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி என்றும் தெரிவித்தார்.