தொண்டையில் மீன் சிக்கி இளைஞர் உயிரிழந்த சோகம்

Update: 2025-04-09 03:44 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொண்டையில் மீன் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரையப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அருகில் உள்ள கீழவளம் ஏரியில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவர்

கையில் சிக்கிய பணகொட்டை மீனை வாயில் கவ்வி கொண்டு, மீண்டும் மீன் பிடித்துள்ளார். திடீரென

வாயில் கவ்வி கொண்டிருந்த மீன் தொண்டையில் சிக்கியதால், மூச்சு விட முடியாமல் திணறிய மணிகண்டன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்