Car accident || சொந்த ஊருக்கு செல்லும் போது ஏற்பட்ட விபரீதம் - நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி
ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி.
திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தினகரன் மஞ்சுளா தம்பதி. இருவரும் தங்களுக்கு சொந்தமான காரில், சொந்த ஊரான வேலூருக்கு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். தினகரன் காரை ஓட்டி வந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை வந்தடைந்த போது, காரின் முன் பகுதியில் கரும்புகை வெளியேறியது. இதனால் சூதாரித்துக் கொண்ட தினகரன், சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு, தனது மனைவியுடன் காரில் இருந்து வெளியேறினார். சில நிமிடங்களில் கார் திடீரென தீ பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. தொடர்ந்து விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசருக்கும் தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு படை வீரர்கள், காரில் பற்றி எரிந்து வந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அனைத்தனர். இருப்பினும், கார் முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.