மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள செம்மினிபட்டி கிராமத்தில் ஆண்டி பாலகர் கோவிலுக்கு சொந்தமான கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒரு சேர கண்மாயில் இறங்கி, கச்சா, ஊத்தா கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் கட்லா, ரோகு, அயிரை உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.