Tractor damage || ரயில்வே தண்டவாளத்தில் பழுதாகி நின்ற ட்ராக்டர்.. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து - அதிர்ச்சி சம்பவம்
Tractor damage || ரயில்வே தண்டவாளத்தில் பழுதாகி நின்ற ட்ராக்டர்.. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து - அதிர்ச்சி சம்பவம்
விழுப்புரத்தில் கரும்பு லோடு ஏற்றி வந்த ட்ராக்டர், ரயில்வே கிராஸிங்கில் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் ரயில்வே கிராஸிங் பகுதியை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், விவசாயிகளும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ரயில்வே கேட் தாண்டும்பொழுது, பாரம் தாங்காமல் கரும்பு ஏற்றி வந்த டிராக்டரின் கொக்கி உடைந்து, தண்டவாளத்தில் ட்ராக்டர் நின்றது. இதில் சாலையில் பெரிய ஓட்டையும் ஏற்பட்டது. உடனே, ஜேசிபி வரவழைக்கப்பட்டு, அந்த டிராக்டர் அகற்றப்பட்டது, இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.