கடலில் மூழ்கிய பல்லவர் காலத்து கோவிலின் தடயங்கள் கண்டுபிடிப்பு
மாமல்லபுரத்தில் பல்லவர் காலத்தில் கடலில் மூழ்கிய ஒரு கோயிலின் தடயங்கள் மற்றும் கட்டுமானங்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் கடந்த 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கருங்கல்லினால் 7 கோயில்கள் வடிவமைக்கப்பட்டதாகவும், அதில் 6 கோயில்கள் கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து 5 பேர் கொண்ட தொல்லியல் துறை கடல் ஆராய்ச்சி பிரிவினர் கடற்கரை கோயிலுக்கு அருகில் 1 கிலோ மீட்டர் தூரம் வரை படகில் சென்று ஆராய்ச்சி நடத்தினர். அப்போது நவீன தானியங்கி கருவியை 6 மீட்டர் ஆழத்தில் மூழ்க செய்து ஆராய்ச்சி நடத்தியதில் கடலில் மூழ்கிய ஒரு கோயிலின் தடயங்களும், கருங்கல் கட்டுமானங்களும் கண்டறியப்பட்டது.