மழை காரணமாக வரத்து குறைந்ததால், ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த மூன்று நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது.
ஒரு கிலோ தக்காளி 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 5 ரூபாய் அதிகரித்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.