ஒரே நாளில் தக்காளி விலை ரூ.15 உயர்வு - மக்கள் அதிர்ச்சி
மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால், தக்காளி விலை ஒரே நாளில் 15 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடந்த ஒரு வார காலமாக குறைந்து இருந்த நிலையில், ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஒரே நாளில் தக்காளி விலை 15 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு கிலோ தக்காளி 35 ரூபாய்க்கும், நவீன் தக்காளி 1 கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், சில்லறை விற்பனை கடைகளில் 1 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மழை காரணமாக திடீரென வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.